வீடுகளுக்கு மாதம் தோறும் மின் கட்டணம் – தமிழக அரசு ஆலோசனை

71பார்த்தது
வீடுகளுக்கு மாதம் தோறும் மின் கட்டணம் – தமிழக அரசு ஆலோசனை
வீடுகளுக்கு மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறையை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, "தமிழகத்தில் முதற்கட்டமாக 1 கோடி வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது. அந்த வீடுகளுக்கு முதலில் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, வருகிற ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு வீடுகளுக்கு மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறையை செயல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி