2021ம் ஆண்டு முதல் 27.3.2025 வரை இலங்கை கடற்படையால் 1,383 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியால் 1,287 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பி உள்ளனர் என மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் மீதம் உள்ள 96 மீனவர்களையும், 229 மீன்பிடி படகுகளையும் விடுவித்து தாயகம் கொண்டு வர அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.