கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுச்சேரியை சேர்ந்த ரவுடி முட்டை விஜய் (19) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் எம்.புதூர் பகுதியில் பதுங்கி இருந்த அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். அரிவாளை கொண்டு இரண்டு போலீஸ்காரர்களை விஜய் தாக்கியதையடுத்தே இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் காயமடைந்த காவலருக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது.