அதிமுக கூட்டணி வேண்டாம்.. என பரமக்குடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், "வேண்டும்.. வேண்டும்.. மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும்... வேண்டாம்... வேண்டாம்... அதிமுக கூட்டணி வேண்டாம்.." என்று பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் என்ற பெயரில் பரமக்குடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.