திருச்சி: யூட்யூபில் பாடல் கேட்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்

60பார்த்தது
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூர் நோக்கி குழந்தைகள் பெண்கள் என 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் TN. 45 N 4170 அரசு பேருந்து புறப்பட்டது. அங்கிருந்து கரூர் பைபாஸ் ரோடு வழியாக சத்திரம் பேருந்து நிலையம் அடைந்து அங்கிருந்து மீண்டும் கரூர் நோக்கி சென்றது. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை இருவழி சாலையாக உள்ளது. மிகவும் ஆபத்தான வளைவுகளை கொண்ட இந்த சாலையில் அரசு பேருந்தின் ஓட்டுனர் செல்போனில் யூடியூப் வீடியோவை பார்த்து கொண்டே ஒற்றை கையில் பேருந்தை இயக்கியது கண்டு பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். உடனடியாக பேருந்து நிறுத்தி பயணிகளை காப்பாற்றுமாறு பேருந்தில் பயணிக்கும் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.


ஆபத்தை உணராத பேருந்து ஓட்டுநர், சாகசம் செய்வதைப் போல ஒரு கையில் செல்போனில் பாடல் கொண்டு, இன்னொரு கையால் ஸ்டேரிங் மூலம் ஓட்டுவது, கியர் மாற்றுவது, ஹாரன் அடிப்பதுமாகவும், சில நேரம் ஸ்டேரிங்கில் இருந்து இரண்டு கைகளையும் விட்டுவிட்டு பேருந்தை இயக்கியுள்ளார்


இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக புகார் அளிக்கும் பொதுமக்கள், இது குறித்து, அரசு போக்குவரத்துத் துறை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இதைப் போன்ற விதிமுறையை மீறும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி