சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான ஸ்டுடியோ கிப்ளி இமேஜ் ஜெனரேஷன் அம்சம் சமூக ஊடக ஆர்வலர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இது மிகவும் ஆபத்தாக கூட அமையலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் உங்கள் அடையாளம் திருடப்படலாம் எனவும், இதனால் சைபர் குற்றங்களும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே போன்று ஆஸ்திரேலியாவின் அவுட்டாபாக்ஸ் என்ற தளத்தில் இருந்து 10 லட்சம் பேரின் தரவுகள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.