
திருச்சி: குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது
மணப்பாறை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சூசைமாணிக்கம் மகன் யாக்கோப்(எ) லெனின் விஜயபாஸ்கர் (23), இந்திரா தியேட்டர் அருகே கிழக்கு நாகம்மாள் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் தனபால் (55) நடந்து சென்றபோது, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து தனபாலிடமிருந்து ரூ. 1000-ஐ பறித்துச் சென்றார். இதுதொடர்பாக மணப்பாறை காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிந்து லெனின் விஜயபாஸ்கரை கைது செய்தனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரையின்பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, சனிக்கிழமை சிறையில் உள்ள லெனின் விஜயபாஸ்கரிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.