மணப்பாறை - Manapparai

திருச்சியில் பெற்றோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மகன்

திருச்சியில் பெற்றோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மகன்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் கணேசன், நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கமாண்டர் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கவியரசன் இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணேசன் கவியரசனுக்கு சொத்தை பிரித்துக் கொடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.  இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 3) குடிபோதையில் வந்த கவியரசன் பெற்றோரிடம் சொத்துக் கேட்டு தகராறு செய்ததோடு தாயின் தலையில் அம்மிக்கல்லால் தாக்கினார். இதை தடுக்கச் சென்ற தந்தை கணேசனை அரிவாளால் கவியரசன் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சாய்ந்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நவல்பட்டு போலீசார் கணேசன், கலைச்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கவியரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా