உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட விற்பனை வீழ்ச்சியுடன், இன்று (ஏப்ரல் 7) நிஃப்டி 50 குறியீடு 1,000 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. இது மார்ச் 4 ஆம் தேதி குறைந்தபட்சமாக இருந்த 21,964 புள்ளிகளுக்கு அருகில் பெஞ்ச்மார்க் குறியீட்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அமெரிக்கா அதிபரின் கூடுதல் வரிவிதிப்பே இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்றைய தினம் மிகப்பெரிய அளவில் பங்குச்சந்தை சரிந்ததால், ‘Black Monday’ ஏற்பட வாய்ப்புள்ளது.