திருச்சியில் சர்தேச ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆட்டிச குழந்தைகளின் வாழ்வின் தரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த இயன்ற முயற்சிகளை செய்வோம் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 17 பள்ளிகளில் இருந்து 72க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியானது ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. மேலும் அழைத்து வரப்பட்ட ஆட்டிச குழந்தைகளுக்கு உரிய இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் குழந்தைகள் தரையில் உட்காரும் அவலம் ஏற்பட்டது.