திருச்செந்தூர் - Thiruchendur

தூத்துக்குட: ஒரே அறையில் தாய், மகன் தூக்கு போட்டு தற்கொலை

தூத்துக்குட: ஒரே அறையில் தாய், மகன் தூக்கு போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர், மேல தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். ஓய்வு பெற்ற தலையாரி. இவரது மனைவி முத்தம்மாள்(65). இந்த தம்பதிகளுக்கு மந்திரமூர்த்தி (40), சின்னத்துரை (30) என்ற 2 மகன்கள் உள்ளார். இதில் சின்னத்துரை கொத்தனார் கையாளாக வேலை பார்த்து வந்தார். சண்முகம் சில வருடங்களுக்கு இறந்துவிட்ட நிலையில் முத்தம்மாள் தனது மகன்களுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் முத்தம்மாள் வீடு நேற்று (அக்.,22) திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் திருவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கே முத்தம்மாள் அவரது மகன் சின்னத்துரை இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் 2 பேர் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், புதிய வீடு கட்டுவதற்காக முத்தம்மாள் வங்கியில் லோன் வாங்கி இருந்தாராம். ஆனால் அந்த லோனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வங்கியில் இருந்து நெருக்கடி கொடுக்கவே முத்தம்மாள் மனம் உடைந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా