தூத்துக்குடி: குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

66பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கொட்டங்காடு, சிவலூர் பகுதிகளில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஆதியாகுறிச்சி பகுதியில் விண்வெளி தொழிற்பூங்கா உள்ளிட்ட பல்வேறு தொழிற்துறை நோக்கங்களுக்காக நில கையகப்படுத்தப்பட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் விவசாய நிலங்களில் கணக்கெடுப்பு பணியும் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆதியாகுறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

தங்கள் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த கூடாது, மாற்று இடத்தில் திட்ட பணிகளை துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி