அய்யா வைகுண்டரின் அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அவதார பதியில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், அய்யா வைகுண்டரின் அவதார தின விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 193வது அவதார தினவிழாவை முன்னிட்டு அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதிகாலை 3மணி முதல் அய்யாவுக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல், பணிவிடைகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. காலையில் சூரிய உதயத்தின் போது பள்ளியரையில் உள்ள பனிவிடை பொருட்களுக்கு கடல் பதமிடுதல் நிகழ்வு நடைபெற்றது.
இதில் துணை தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால், செயலாளர் பொன்னுதுரை, துணைச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து காெண்டு வழிபட்டனர்.