சாலையை சீரமைக்க வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்!

57பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் உள்ள பழையகாயல் அருகே உள்ள மீனவ கிராம கணேஷ் நகர் பகுதிக்கு செல்லும் சாலை சேதுமடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காததால் பொதுமக்கள் பாதிப்பு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கணேஷ் நகர் பகுதி அமைந்துள்ளது மீனவ கிராமமான இந்த பகுதியில் மீனவர்கள் மற்றும் உட்பள தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்

இந்த கிராமத்தின் முக்கிய சாலை கடந்த 2023 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் பெரிதும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாக அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இதைத் தொடர்ந்து இன்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாதர் சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட கணேஷ் நகர் பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி