குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பூமி பூஜை!

83பார்த்தது
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன.

பி. எஸ். எல். வி, ஜி. எஸ். எல். வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன.

தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2, 233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி