திருச்செந்தூர்: கடல் அரிப்பு குறித்து தேசிய ஆராய்ச்சி மைய குழுவினர் ஆய்வு

67பார்த்தது
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் கடந்த சில தினங்களாக அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த கடல் அரிப்பு குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்பி அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த நிலையில் இன்றைய தினம் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் திருச்செந்தூர் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் கடற்கரையில் இதுவரையில் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு இருந்து அமலிநகர் கடற்கரை வரையில் கடற்கரையோரம் நடந்து சென்று கடலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து நாளைய தினம் கடல் பகுதியை ட்ரோன் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை புவி அறிவியல் அமைச்சகத்திடம் வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து கடற்கரையில் கடல் அரிப்பை தடுப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்தி