சென்னையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

62பார்த்தது
18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று (மார்ச் 22) மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றிவாகை சூடியது. இந்த நிலையில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெற உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்தி