விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். முயல் வேட்டைக்காக சென்ற போது மாரியப்பன் என்பவரது விவசாய தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி முருகன் என்பவர் பலியானார். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.