மசூதி மீது தாக்குதல் - 44 பேர் பலி

50பார்த்தது
மசூதி மீது தாக்குதல் - 44 பேர் பலி
நைஜரில் நாட்டில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். பம்பிடா என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மசூதியை சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்ட நிலையில், 13 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி