உலகிலேயே முதல் நாடாக 6ஆம் தலைமுறை போர் விமானத்தை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. அதன் பெயர் F47. இந்த விமானத்தை ரகசியமாக 5 ஆண்டுகளாக USA பறக்கவிட்டு சோதித்து வந்துள்ளது. இந்நிலையில், டிரம்ப் 6ஆம் தலைமுறை போர் தயாரிப்பு குறித்த தகவலை பகிர்ந்தார். போயிங் நிறுவனத்திடம் F47 விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது, உலகின் வேறு எந்த நாட்டிடமும் இதுபோன்ற விமானம் இல்லை எனவும் கூறினார்.