மீன்கள் விலை குறைவு; பொதுமக்கள் மகிழ்ச்சி!

51பார்த்தது
தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க அலை மோதிய பொதுமக்கள் கூட்டம் கிறிஸ்தவர்களின் தவக்காலம் மற்றும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருப்பதால் மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான நாட்டு படகுகள் கரை திரும்பின இதன் காரணமாக மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது மீன்களை வாங்க பொது மக்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது

மேலும் கிறிஸ்தவர்களின் தவக்காலம் மற்றும் இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு காரணமாக கேரளாவிற்கு அதிக அளவு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படாத காரணத்தால் மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது

சீலா மீன்கள் கிலோ 800 ரூபாய் வரையும் ஊளி பாறை விளைமீன் ஆகிய மீன்கள் கிலோ 400 ரூபாய் வரையும் கேரை சூரை குருவளை மயில் மீன் உள்ளிட்ட மீன்கள் கிலோ 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனையானது நண்டு கிலோ 400 ரூபாய் வரைக்கும் விற்பனையானது இதன் காரணமாக மீன்களை வாங்க வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி