ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவரது வருகை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் செல்லும் சாலையில் ஆங்காங்கே அமர்ந்திருந்த பக்தர்களை அங்கு வந்த போலீசார் அப்புறப்படுத்தினர். கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
காரில் வந்து இறங்கிய அவர் பேட்டரி கார் மூலம் கோவில் முன்பு வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற அவர் மூலவர் முருகர், உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், தெட்சிணாமூர்த்தி, சத்ரு சம்ஹார மூர்த்தி உட்பட பரிவார தெய்வங்களை வணங்கினார். தொடர்ந்து வெளியே வந்த அவருக்கு இலை விபூதி உள்ளிட்ட கோவில் பிரசாதங்களை அர்ச்சகர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து அவருடன் நின்று கோவில் பணியாளர்களும், அர்ச்சகர்களும் புகைப்படமும் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.