திருச்செந்தூர் - Thiruchendur

கோவிலில் பூஜைப் பொருட்கள் திருட்டு: 4 பேர் கைது

கோவிலில் பூஜைப் பொருட்கள் திருட்டு: 4 பேர் கைது

ஆறுமுகநேரி சீனந்தோப்பு பார்வதி அம்மன் கோவிலில் ரூ. 1லட்சம் மதிப்புள்ள பூஜைப் பொருட்கள், குத்துவிளக்கு, மணிகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி சீனந்தோப்பில் உள்ள பார்வதி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 25ஆம் தேதி அறைக் கதவுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு 195 சிறிய குத்துவிளக்கு, 7 அடி குத்துவிளக்கு 4, மூன்றரை அடி குத்துவிளக்கு 21, 250 தீபகாண்டி, 10 கிலோ எடையுள்ள நான்கு தொங்கும் மணி, 35 கிலோ எடையுள்ள ஐந்து தொங்கும் மணி, 7 கிலோ எடையுள்ள தாம்பூலம் உள்ளிட்ட பித்தளை பொருள்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து கோயில் டிரஸ்டி செயலர் சோழர் செல்வின் (63) ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்லத்துரை வழக்குப்பதிந்தார். ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் விசாரித்தார். அதில், ஆறுமுகனேரி தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முருகேசன் (59), சோனகன் விளை வேத கோயில் தெரு பலவேசம் மகன் சக்திவேல் (42), திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி, சோமநாதபுரி பால் சந்திரசேகர் மகன் மரியமிக்கேல் (28), பேய்குளம் பழனியப்பபுரம் முருகன் மகன் அருண்குமார் (25) ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా