திருச்செந்தூர் - Thiruchendur

திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருச்செந்தூர் கோவிலில் விடுமுறை தினம், சுப முகூர்த்த நாளான நேற்று பக்தர்கள் குவிந்தனர். சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டு மல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4. 30 மணிக்கு விஸ்வரூப தீபாரத னையும், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. சுப மூகூர்த்தம் நாள் என்பதால் இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా