முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த திருச்செந்தூர் முருகன் கோவில் பரிகார ஸ்தலமாக விளங்குவதால் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அவர் கோவில் பேட்டரி காரில் வந்து இறங்கி கடற்கரையில் கால் நனைத்தார். அதன்பின் திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்ற அவர் மூலவர் அபிஷேகம் பார்த்தார். அதன்பின் சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார்.
அதன் பின் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்செந்தூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவரும் கோவில் முன்புள்ள கடலில் கால்நனைத்தார். அதை தொடர்ந்து அவர் கோவிலுக்கு சென்றார். செல்லும் வழியில் அவரை சூழ்ந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதன்பின் அவர் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.