திருச்செந்தூர் கோவிலில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள்

75பார்த்தது
திருச்செந்தூர் கோவிலில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2-7-2009 அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி நடக்கிறது. 

இதை முன்னிட்டு எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ. 100 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளும், கும்பாபிஷேக திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால் கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு பகுதியாக 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது. 

ராஜகோபுரத்தில் 9-வது நிலையில் கட்டப்பொம்மன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய மணியையும் பழமை மாறாமல் புதுப்பித்து நிறுவியுள்ளனர். கும்பாபிஷேக தினத்தன்று ராஜகோபுர மணி மீண்டும் ஒலிக்கவுள்ளது. ராஜகோபுரத்தை புதுப்பித்து வர்ணம் பூசும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதற்காக ராஜகோபுரத்தைச் சுற்றிலும் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு, அவற்றில் நின்று தொழிலாளர்கள் பழங்கால சிற்பங்களுக்கு வர்ணம் பூசுகின்றனர். சேதமடைந்த சிற்பங்களையும் புதுப்பிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி