திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு அதிகாலை நடைபெற்றது, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திருக்கோயிலிலிருந்து கொடிப்பட்டம் புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பின்னர் காப்பு கட்டிய ச. பாலசுப்பிரமணியன் வல்லவராயர், கொடிமரத்தில் திருவிழாக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திருக்கோயில் உதவி ஆணையர் நாகவேல், மணியம் செந்தில்குமார், ஆறுமுகராஜ், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் அம்மன் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான வருகின்ற பிப்ரவரி 29ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.