முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூருக்கு இன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.
அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினம் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் குடும்பத்தோடு விளையாடி மகிழ்ந்து பொழுதை கழித்து வருகின்றனர். இதற்காக கடலில் குளித்தும், கடல் மணலில் விளையாடியும் வருகின்றனர்.
மேலும் சில இளைஞர்கள் கடற்கரை மணலில் ஒரு இளைஞரை மணலால் மூடி விளையாடினர். குழந்தைகள் சிலர் கடற்கரை மணலை தோண்டி விளையாடி மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.