மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்; ஆட்சியர் பங்கேற்பு. ‌

80பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் பெரியதாழை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்களுக்கான டீசல் மானியத்தை வழங்காமல் தடை செய்துள்ளது உடனடியாக வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை


தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது இந்த குறைதிர்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இதில் கலந்துகொண்ட மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் பெரியதாழை மற்றும் வேம்பார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவ கிராமங்கள் கடலுக்கு உள்ளே செல்லும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது இதற்கு முக்கிய காரணமாக கடல் பகுதியில் இருந்து தாது மணல் கொள்ளை சம்பவமா அல்லது துறைமுக விரிவாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு காரணமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து கடல் அரிப்பிலிருந்து மீனவ கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி