தூத்துக்குடி: உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம்: எஸ்பி விளக்கம்
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அல்பெர்ட் ஜான் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவைச் சேர்ந்த சுடலைமணி மகன் முத்து சுகுலேஷ் (21) என்பவர் கடந்த 17. 10. 2024 அன்று திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரராகவபுரம் தெருவில் வந்து கொண்டிருந்தபோது அதே பதியைச் சேர்ந்தவர்களான சுடலை மகன் கணேசன் கூவை (38), கிருஷ்ணன் மகன் ராமசாமி (28) மற்றும் சிலர் சேர்ந்து மதுபோதையில் முத்து சுகுலேஷை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து கல்லால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 19. 10. 2024 அன்று மேற்படி எதிரிகளில் கணேசன் கூவை மற்றும் ராமசாமி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் மேற்படி எதிரிகள் சம்பவத்தின்போது கஞ்சா பயன்படுத்தவில்லை என்பதும், வழிப்பறிக்காக முத்து சுகுலேஷை வழிமறித்து தாக்கவில்லை என்றும் சம்பத்தின்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாத்தினால் முத்து சுகுலேஷை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. எனவே இதுபோன்று நிகழ்வின் உண்மைத் தன்மை தெரியாமல் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.