ஆங்கிலருக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார் 228வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியாரின் 228வது நினைவு நாள் இன்று (டிசம்பர் 25) அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் போராளி வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினத்தை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டார்.
பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் போராளியான வீரமங்கை வேலுநாச்சியாரின் புகைப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி லெவிஞ்சுபுரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் ஏராளமான தமிழக வெற்றிக் கழகத்தினர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.