நாகப்பட்டினம் - Nagapattinam

நாகை: விரைவு ரயிலை எழும்பூா் வரை இயக்க வலியுறுத்தல்

காரைக்கால் - சென்னை விரைவு ரயிலை மீண்டும் எழும்பூா் ரயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என நாகூா் தா்கா நிா்வாகம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து நாகூா் தா்கா ஆலோசனைக் குழு தலைவா் சையது முகமது கலீபா சாகிப் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை -காரைக்கால் - சென்னை விரைவு ரயில் தற்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. நாகூா் தா்காவிற்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் யாத்ரிகா்கள் சென்னையில் இருந்து காரைக்கால் விரைவு ரயிலை பயன்படுத்துகின்றனா். தற்போது இந்த ரயிலானது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அதேபோன்று காரைக்காலில் இருந்து செல்லும் ரயில் தாம்பரத்தில் நின்று விடுகிறது. இதனால் நாகூா் தா்காவிற்கு வருபவா்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனா். அதிகாலை 4 மணிக்கு தாம்பரம் செல்லும் இந்த ரயிலில் செல்லும் பொதுமக்கள் மற்றும் யாத்ரிகா்கள் தாம்பரத்தில் இறங்கி அங்கிருந்து எழும்பூா் மற்றும் சென்னை நகரங்களுக்குள் செல்வதற்கும், தாம்பரத்திற்கு செல்வதற்கும் மாற்று போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய நிலையுள்ளது. பராமரிப்பு பணி என காரைக்கால் - சென்னை விரைவு ரயிலை தாம்பரத்தில் நிறுத்திய தெற்கு ரயில்வே, பிற மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் ரயில்கள் தாம்பரத்தில் நிறுத்தப்படவில்லை. இது தொடா்பாக தமிழக முதல்வா் தலையிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்