நாகப்பட்டினம் - Nagapattinam

நூதன முறையில் மனு கொடுக்க வந்த முதியவர்.

நாகை வடக்கு பால்பண்ணைச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குகன். இவர் தனது மகனுக்கு வேலை வாங்குவதற்காக தனது உறவினரிடம் பணம் கொடுத்துள்ளார். அந்த நபர் பணத்தை வாங்கி கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குகன் தனது உறவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஒவ்வொரு வாரமும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்து வந்தார். இந்நிலையில் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, இன்று (செப்.16) ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவர், தலையில் மனுவை வைத்து தரையில் முட்டி போட்டு முழங்காலால் நூதன முறையில் நடந்து வந்தார். அப்போது திடிரென ஒரு கட்டத்தில் தனது மனுவுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, ஆட்சியர் அலுவலக வாசலில் விழுந்து புரண்டு அழுதார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தூக்கி மனுவுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை வீட்டுக்கு சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்