மன்னார்குடி - Mannargudi

மன்னையில் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்

மன்னார்குடியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் பாதியில் கிடப்பில் போடப்பட்டது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் மன்னார்குடி நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதியில் நிறுத்தப்பட்டு பழுதடைந்த பாதாள சாக்கடை அமைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளது பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் மன்னார்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலும் புதிதாக பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது இதனை மன்னார்குடி நகர மன்ற தலைவர் மண்ணை சோழராஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

வீடியோஸ்


திருவாரூர்
வலுவடைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி! வெளுக்கப்போகும் மழை
Nov 24, 2024, 05:11 IST/

வலுவடைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி! வெளுக்கப்போகும் மழை

Nov 24, 2024, 05:11 IST
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.24) தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நாளை (நவ.25) அதற்கு அடுத்த 2 தினங்களில், வடமேற்கு திசையில் தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.