தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் படகு குழாம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் படகு குழாம், அலுவலகம், பயணிகள் அமருமிடம் , படகுகள் உள்ளிட்டவற்றை தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.