ஒரு காலத்தில் ஆரணி என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் விஷயம் அரிசியாகவே இருந்தது. அந்த பெருமையைப் ’பட்டு’ தட்டி சென்று 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆரணிப் பட்டுச் சேலைகள் சர்வதேச அளவில் விற்பனை ஆகிறது. பல மாநிலங்களில் இருந்து நேரடியாக ஆரணிக்கே வந்து சேலைகளை கொள்முதல் செய்யும் அளவுக்கு புகழ்பெற்றிருக்கிறது. பாரம்பரிய நெசவாளர் சமூகங்கள் மட்டுமில்லாமல், புதிய சமூகங்களும் இதை ஒரு தொழிலாக மேற்கொண்டுள்ளனர்.