டிஜிட்டல் கைது என்பது, சைபர் குற்றவாளிகள் போலீஸ், சிபிஐ அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, மக்களை மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மோசடியாகும். இந்த மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் ஒரு நபரை தொடர்பு கொண்டு நீங்கள் குற்றச்செயலில் சிக்கியுள்ளீர்கள். உங்கள் ஆதார் அல்லது தொலைபேசி எண் தொடர்புடைய குற்றம் நடந்துள்ளது என மிரட்டி பல்வேறு வழிகளில் பணம் பறிப்பார்கள்.