2024-25 நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், 2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தால் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, டிஜிட்டல் நிதி மோசடியில் ரூ.4,245 கோடி பறிபோய் உள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டை விட 67 சதவீதம் அதிகமாகும். டிஜிட்டல் நிதி மோசடிகளை தவிர்க்க இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.