தற்கொலை செய்ய முயன்ற தாய், மகன்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்

61பார்த்தது
தற்கொலை செய்ய முயன்ற தாய், மகன்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள எழமடுவைச் சேர்ந்தவர் ரஞ்சித் (35). இவர் தனது தாய் சுஜாதாவுடன் (58) வசித்து வந்தார். சுஜாதா நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவாக இருந்துள்ளார். மேலும் அவர்கள் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஞ்சித், சுஜாதா இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இருவரும், உயிருக்கு போராடிய நிலையில், ரஞ்சித் மரணமடைந்தார். உயிருக்கு போராடிய சுஜாதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி