அரசு பள்ளி நூலகத்தில் 12 ஆயிரம் புத்தகங்கள்.. அசத்திய தலைமை ஆசிரியர்

61பார்த்தது
அரசு பள்ளி நூலகத்தில் 12 ஆயிரம் புத்தகங்கள்.. அசத்திய தலைமை ஆசிரியர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாசராகவன். இவர் மாணவர்களின் கல்வியை விட அவர்களின் ஒழுக்கமே வளமான எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் உறுதியாக இருக்கிறார். எனவே மாணவர்கள் படிக்கும்போதே நல்ல தகவல்களைத் தெரிந்து கொள்ள பள்ளி நூலகத்தை மேம்படுத்தியுள்ளார். வேறு எந்தப் பள்ளியிலும் இல்லாத அளவில் நாமக்கல் ஆண்கள் பள்ளி நூலகத்தில் 12,000 புத்தகங்கள் வைக்கப்பட்டு மாணவர்கள் வாசிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி