பூண்டி அணையில் ₹ 2. 11 கோடி மதிப்பில் மதகு எண்கள் 8 மற்றும் 9ல் மணற்போக்கி கதவணைகள் சீரமைத்துள்ளதை எம்எல்ஏ வேல்முருகன் தலைமையிலான சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருண்மொழி உதவி செயற்பொறியாளர் பாபு சத்யநாராயணன் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்தனர்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு: திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதை திருத்தணி பேருந்து நிலையம் அரசு மருத்துவமனை கே கே சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் திருத்தணி திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பூண்டி அணை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ள பல்வேறு திட்டப் பணிகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் சட்ட பேரவையின் அரசு உறுதிமொழி குழு எம்எல்ஏக்கள் ஆய்வு செய்தனர்.