மதுரவாயலில் பேட்டரி வாகனத்தை சார்ஜ் செய்த போது தீப்பிடித்து எரிந்த விவகாரத்தில் தந்தையும் சிகிச்சை பலனின்றி பலியானார். அருகே உள்ள மதுரவாயல் அன்னை இந்திராகாந்தி நகர் பகுதியில் பேட்டரி வாகனத்தின் சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, 9 மாத கைக்குழந்தை உட்பட மூவரும் படுகாயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தந்தை கௌதம் (33) என்பவரும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். குழந்தை உயிரிழந்த நிலையில் தந்தையும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.