திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி எதிரே பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையிலும்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா. தாஸ், ஞானசேகரன், பிரபாகரன் ஆகியோர் முன்னணியில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது
கடந்த நான்கு ஆண்டுகளாக
தமிழ்நாடு அரசு தேர்தலின் போது எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தராமல் ஏமாற்றி வருவதாகவும், 1. 4. 2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ சார்பில் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து அனைவருக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதியக் குழுவின் நிலுவைத் தொகையை தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட பணியாளர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் எனக் கூறி
ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா தாஸ் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்