மோகன்லால் நடிப்பில் வெளியாகவுள்ள 'எம்புரான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின் நடித்துள்ளார். பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'லூசிஃபர்' படத்தின் 2ஆம் பாகமாக 'எம்புரான்' உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இப்படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தோமஸ், சுராஜ் வெஞ்ஞாரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.