திருவள்ளூர்: கோவில் குளத்தை சேதப்படுத்தி கால்வாய் கட்டும் நகராட்சி

61பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. சோழ மன்னனால் கட்டப்பட்ட இதன் கருவறையில் சுயம்பு வடிவாக தோன்றிய சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இந்த குளத்தை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் குப்பைகழிவுகளை குளத்தில் வீசுவதாலும், கழிவுநீரை குளத்தில் விட்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பொன்னேரி நகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக அதன் அருகிலேயே ஜேசிபி இயந்திரம் மூலம் நீளமாக பள்ளம் தோண்டியுள்ளனர். பொன்னேரி நகராட்சி அதிகாரிகள் பக்தர்களின் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய பின்னரும், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் கழிவுநீர் கால்வாயை கட்டியே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோவில் முன்பாக கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், குளத்தைச் சுற்றி தோண்டிய பள்ளத்தை மூடாமலும் அலட்சியம் காட்டி வருவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி