திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்
இன்று தரிசனம் செய்வதற்காக தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வருகை தந்தார் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை 100கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ராஜாளி விமான படைத்தளத்தில் இருந்து தனி விமானத்தில் வந்த பவன் கல்யாண் கார் மூலமாக சாலையில் திருத்தணி மலை கோயிலுக்கு வந்தடைந்தார் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா ஆகியவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை அடுத்து திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் வேதாச்சாரியார்கள் திருக்கோயில் நிர்வாகத்தினர் பூமாலை அணிவித்து வரவேற்றனர் இதனைத் தொடர்ந்து மலைக் கோவிலில் கொடி மரத்தை வணங்கி விநாயகர் சன்னதியை வணங்கி , உற்சவர் சண்முகப் பெருமானை வணங்கி மூலவர் முருகப்பெருமானை 15நிமிடத்திற்கு மேலாக அமர்ந்து பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார் இதனைத் தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகத்தினர் முருகப்பெருமான் சாமி படம் வழங்கி, மலர் மாலை மற்றும் பிரசாதம் வழங்கினார்கள் பவன் கல்யாண் சாமி தரிசனம் வருகைக்காக ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாமி தரிசனம் சாதாரண பக்தர்களுக்கு செய்ய முடியாத அளவிற்கு திருக்கோயில் நிர்வாகம் தடுத்து நிறுத்தினர் கடும் வெயில் காரணமாக பக்தர்கள் அவதி அடைந்தனர்.