ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு

67பார்த்தது
திருத்தணி அருகே உள்ள வீரணத்தூர் கிராம பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் ஆர். கே. பேட்டை ஒன்றியகுழு முன்னாள் தலைவர் ரஞ்சிதத்தின் தந்தை ஏகாம்பரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி வார்டு முன்னாள் உறுப்பினர்கள் லதா உஷா பிரேம் குமார் சீனிவாசன் சுந்தரமூர்த்தி சம்பந்தன் சுரேஷ் ராமு முனுசாமி மற்றும் கிராம ஊராட்சி செயலர் வெங்கடேசன் ஆகியோருடன் கிராமத்தில் பெரிய மலை அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலம் சர்வே எண் 337 ல் உள்ள நிலங்களில் 468 வீட்டுமனை பிரிவுகளாக பிரித்து ₹1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரித்துள்ளதாகவும் பொதுப்பணித்துறையினர் 3 முறை வைத்த பெயர் பலகையை அகற்றிவிட்டு அந்த இடத்தை கிராமத்தில் உள்ளவர்களுக்கு வழங்குவதாக கூறி தலா ₹5000 வீதம் ₹20 லட்சம் பணத்தை வசூல் செய்து கொண்டு ஏமாற்றியதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் புகார் மனு அளித்தனர் இதுகுறித்து வட்டாட்சியர் வருவாய் கோட்ட அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என 35 முறை பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர் அரசுக்கு சொந்தமான மலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அதை பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்த நபர்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி