திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது திரளான பக்தர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும்
ஞாயிறு இன்று பொது விடுமுறை என்பதால்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், மற்றும் தெலுங்கானா மாநிலம் போன்ற பகுதியிலிருந்து சாமி தரிசனம் செய்ய மலைக் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்,
இதனால் மலைக்கோவில் முதல் மலை அடிவாரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
மேலும் இன்று மலை கோவிலில் கல்யாண உற்சவர் முருகப்பெருமானுக்கு திரளான பக்தர்கள் முன்னிலையில் யாகசாலை பூஜையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது
மேலும் பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்ய இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.