கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை: சிசிடிவி வீடியோ

55பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தண்டலம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இக்கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனை அடுத்து கிராம மக்கள் சார்பில் பொன்னியம்மன் கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பொன்னியம்மன் கோவிலின் இரும்பு கதவில் பூட்டப்பட்டுள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் பணத்தோடு உண்டியலை திருடிச் செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நேற்று காலை வழக்கம் போல் அர்ச்சகர் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் மாயமானதும், பணத்தை திருடி சென்ற கொள்ளையன் உண்டியலை அருகே உள்ள வயல்வெளியில் வீசிவிட்டு சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து இக்கோயிலில் திருட்டு சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி