தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் பெரிய கோயில் பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு பால், சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடக்கிறது. சிறப்பு வாய்ந்த சிவராத்திரியில் இறைவனை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் அங்கு குவிந்தனர்.